Apr 4, 2009
ஒன்ஸ் மோர் கேட்கும் ரசிகர்களுக்கு ரஜினி தந்த ஒரிஜினல் மோர்
சென்னை: ஐதராபாத்தில் எந்திரன் ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனது தோட்டத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.
தனது பண்ணை வீட்டில் தொழிலாளர்கள் வெயிலில் கஷ்டப்படுவதை பார்த்த நமது உழைப்பாளி அவர்களுக்கு மோர் கொடுக்க உத்தரவிட்டார். இந்த மோர் தானத்தை தனது தோட்டத்துடன் நிறுத்தாமல் அந்த பக்கம் சென்றவர்களுக்கும் கொடுத்து, பொது மக்களின் வயிறை மட்டுமல்ல மனதை குளிர வைத்தார்.
சென்னையில் கொளுத்தும் கோடை வெயிலில் சுற்றி கொண்டிருந்தவர்களுக்கு இந்த மோர், அமிர்தம் போல் தோன்றியது. இந்நிலையில் காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மோர் பந்தல் களத்துக்குள் தானே இறங்கினார்.
அனைவருக்கும் தனது கையால் மோர் வழங்கி, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். சிறிது நேரத்தில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.
இதை தொடர்ந்து தனது கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் இந்த மோர் பந்தலை துவக்கியுள்ளார். தினமும் 200 லிட்டர் தயிரை மோராக்கி விநியோகிக்கின்றனர்.
மோர் விநியோகிக்க ஒரு ஆளையும் ரஜினிகாந்த் நியமித்து உள்ளார். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த மோர் பந்தல் திறந்து இருக்கும்.
ஒன்ஸ் மோர் கேட்கும் ரசிகர்களுக்கு ஒரிஜினல் மோர் தந்து அசத்தி வருகிறார். தமிழகமே தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ரஜினிகாந்த் கூலாக மோர் வழங்கி வருகிறார். அவர் வழி எப்போதும் தனி வழி தான்.
source:www.tamilmithran.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment